P.S.AMALRAJ

CHAIRMAN

Bar Council Of TamilNadu & Puducherry

Shape

My heartiest congratulations to the Thiruvottiyur Advocates Association for completing 25 years of its service to the legal fraternity. Your association had achieved tremendous growth and it has built goodwill among the legal community. From the very inception, your association is an independent Bar and it has been in the vanguard of the movement for uploading, maintaining and consolidation of the constitutional values of democracy and independence of judiciary as well as protect the interests and dignity of the Bar. Congratulations for the wonderful journey of 25 years of success and I hope the same will be continued in future also. I wish you all the best for the upliftment of the legal fraternity of your Bar Association.

History

S.PRABHAKARAN

VICE CHAIRMAN

Bar Council Of India

Shape

வாழ்த்துரை
திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கம் தனது வெள்ளி விழா ஆண்டினை சீறும் சிறப்படனும் கொண்டாடும் செய்தி கேட்டு நான் வழக்கறிஞர்கள் பெருமகிழ்வு உற்றேன். ஒற்றுமையாகவும் உறுதியோடும் இத்தனை ஆண்டுகாலம் பழகி ஒருவரை ஒருவர் அனுசரித்து அதன் மூலம் திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்திற்கு மிகச் சிறந்த நிர்வாகிகளை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக அளித்து வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்களின் பாச உணர்வும் அவர்களின் விருந்தோம்பல் முறையும் கண்டு நான் பலமுறை வியந்து போய் உள்ளேன். அவர்களின் வெள்ளி விழா கொண்டாட்டம் மிகச் சிறந்த விழாவாய் அமைந்து மேலும் பல விழாக்களை இச்சங்கம் கொண்டாட என் மனப்பூர்வ வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

History

G.MOHANA
KRISHNAN

PRESIDENT

Madras Highcourt
Advocates Association Chennai

Shape

சென்னை மாநகரத்தின் வட எல்லையில் அமைந்துள்ள தெய்வீக ஸ்தலங்களில் ஒன்றான புகழ்பெற்ற ஸ்ரீ வடிவுடை அம்மன் வீற்றிருக்கும் திருவொற்றியூரில் அமைந்துள்ள வழக்கறிஞர் சங்கம் தனது வெள்ளி விழாவினை கொண்டாடும் செய்தி கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல் நீதிமன்றத்திற்கு வருகை தரும் வழக்கறிஞர் அனைவருக்கும் நல்லாதரவு தந்து விருந்தோம்பி மகிழ்வித்து மகிழும் வழக்கறிஞர்கள் ஒற்றுமை கண்டு பல முறை நான் வியந்துள்ளேன். அப்படிபட்ட திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு, சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் 25 ஆண்டுகள் அயராது பணி புரிந்த வழக்கறிஞர்களின் சேவைக்கு பாராட்டு விழா போன்ற மூன்று விழாக்களையும் ஒரு சேர கொண்டாடும் திருவொற்றியூரின் வழக்கறிஞர் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சீரும் சிறப்புடனும் அமைய என் நல் வாழ்த்துக்களை இந்த நன்னாளில் மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

History

K.P.SANKAR MLA

Thiruvottiyur Constituency

Shape

அன்புடையீர்
வணக்கம்.
சமூகத்தில் சட்டத்தின் காலவர்களான வழக்கறிஞர்களின் பணி மகத்தான பணியாகும். தொன்மையான வரலாற்று சிறப்பமிக்க திருவொற்றியூரில் திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கம் 1991 ம் ஆண் துவங்கி 25 ம் ஆண்டு வெள்ளி விழா காணும் இந்நாள் வரை சிறப்பாக நியாயத்தையும் சட்டத்தையும் அதை சார்ந்த உதவிகளையும் சிறப்பாக செய்து வருகிறது. வெள்ளி விழாவினை காணும் திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கம் மேன் மேலும் சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துக்கள்.

History